இன்று என்ன நாள்

பாட்டும் நானே பாவமும் நானே!

செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 1500-க்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன். நாகர்கோவில் அருகில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் 1918-ல்பிறந்தார். சிறுவனாக இருக்கும்போதே இசை மீது நாட்டம் ஏற்படவே, பள்ளிப் படிப்பை தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண்வேடத்தில் பாடிக் கொண்டே நடித்தார். அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். பின்னர் இசைக்குழுவில் இணைந்து பம்பாய், ஐதராபாத், டெல்லி, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று கச்சேரி நடத்தினார். 24 வயதில் ‘மனோன்மணி’ திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு முதன்முதலில் இசையமைத்தார். இவர் இசையமைத்த பாடல்கள் ஏராளம் என்றாலும் ‘பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா’, ‘பாட்டும் நானே பாவமும் நானே’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ஏதோ ஓரிடத்தில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. சிறந்த இசையமைப் பாளருக்கான தேசிய விருது 1967-ல்‘கந்தன் கருணை’ திரைப்படத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது. 1969-ல்சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ‘அடிமைப்பெண்’ படத்திற்காக தமிழக அரசு வழங்கியது, 2001 ஜூன் 21-ல் 83 வயதில் காலமானார்.

SCROLL FOR NEXT