சிறப்பு கட்டுரைகள்

உலக தாய்மொழி நாள் | பலூசிஸ்தானில் திராவிட மொழி

Guest Author

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் மட்டுமே பேசப்படுவதாக நினைக்கிறோம். ஆனால், அது தவறு. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிராஹூய் பாகிஸ்தானிலும், குருக் வட்டார வழக்கு நேபாளத்திலும் பேசப்படுகிறது.

ஈரானின் ஸாக்ரோஸ் (Zagros) பகுதியைச் சேர்ந்த உழவர்கள், ஆதி இந்தியர்கள் ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையிலான கலப்பில்தான் சிந்துவெளி நாகரிக மக்கள் உருவானார்கள் என்பது நவீன மரபணுத் தரவுகள் முன்வைக்கும் முடிவு.

ஸாக்ரோஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிந்துவெளிக்கு வந்தபோது கொண்டுவந்த மொழி பூர்வ ஈலாமைட்டாக (Elamite) இருக்க வேண்டும். அதுவே பிற்காலத்தில் பூர்வ திராவிட மொழியாகவும், பின்னர் திராவிட மொழிகளாகவும் பரிணமித்தது என்பது மொழியியலாளர்களின் துணிபு.

இன்றைக்கு பலூசிஸ்தானில் வாழும் பிராஹூய் (Brahui) இனக்குழு மக்கள் பிராஹூய் என்கிற திராவிட மொழியையே பேசுகிறார்கள் (அவர்களின் பூர்வத் தொழில் கால்நடை மேய்த்தல்). பிராஹூய் மொழி, ஈலாமைட் மொழியுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- நேயா

SCROLL FOR NEXT