சிறப்பு கட்டுரைகள்

செல்போன் பிடியில் இருந்து விடுவிக்க வாசிப்பின் வாசல்கள்: தேசிய நூலக வார விழா போட்டியில் வெல்லும் மாணவர்கள்

செய்திப்பிரிவு

"நிறைந்த மக்களுக்கு குறைந்த செலவில் நிறைந்த படிப்பு" என்பதை நோக்கமாகக் கொண்டு பொது நூலகத்துறை செயல்பட்டு வருகிறது" வாழ்க்கைக்கு தேவையான அனைத் தையும் அமுத சுரபியாய் அள்ளிக் கொடுப்பவை நூலகங்கள். "நல்ல புத்தகங்கள் நல்ல கனவு களை வளர்க்கும், நல்ல கனவுகள் நல்ல எண்ணங்களை உண்டாக்கும், நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும்" என்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். 1948-ல் நூலக சட்டம் கொண்டு வரப்பட்டு 1950-ல் நடைமுறைக்கு வந்தது. 1972-ல் பொது நூலக இயக்கம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 1936-ம் ஆண்டில் தங்கள் விருப்பமான நூல்களை தேடி எடுத்து படிக்கவும் வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்து முடித்து திரும்பவும் ஒப்படைக்கும் முறை அமல் படுத்தப்பட்டது இதை "தமிழ்நாடு புத்தகாலய பிரச்சார சங்கம்" முன்னெ டுத்தது இதுவே பொது நூலகத்தின் முதல் படியாகும். தற்போது 55வது தேசிய நூலக வார விழா (நவ.14-21) கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு நூலகம் சார்ந்த பல்வேறு போட்டிகள் நூலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு இன்று பள்ளி நூலகமும், பொது நூலகங்களும் அறிவு தேடலுக்கு விருந்து வைக் கிறது.

மாணவன் நூலை வாசித்த பின்பு நூல் சார்ந்து பேச்சு, ஓவியம் கட்டுரை, புத்தக மதிப்புரை, ஆசிரியர் அறிமுகம், நூல் அறிமுகம், புத்தக ஒப்பீடு மேற்கோளை ஒப்பிடுதல் கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், குறுஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல்... போன்ற போட்டிகள் நடத்தப் படுகின்றன. அதன்படி, பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் 6 முதல் 10-ம்வகுப்பு மாணவர்களுக்கு இரு நிலைகளில் போட்டிகள் நடைபெறும். 4-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வாரந்தோறும் புத்தகம் வழங்கப்பட வேண்டும்.

மாவட்ட அளவிலான போட்டிகள் பிப்ரவரி மாதம் நடைபெறும். 4,5மற்றும் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பள்ளிஅளவிலான போட்டிகள் மட்டும் நடைபெறும். பள்ளி, வட்டார அளவிலான நூலகப் போட்டிகள் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடைபெற வழிகாட்டப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகளுக்கு 2023-ம் ஆண்டு 5 நாட்கள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும். இதில் தலைசிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிறார் எழுத்தாளருடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும். 55- வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் பள்ளி மாண வர்கள் தங்கள் வசிப்பிடம், பள்ளிக்கு அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று அதில் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து கொள்வது சிறப்பு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பல்வேறு விலையில்லா பொருட்கள், படிப்பு உதவித்தொகை மற்றும் இலவச பஸ் பாஸ் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியர்களை அருகில் உள்ள அரசு நூலகங்களில் அரசு சார்பில் காப்புத்தொகை ஆண்டு கட்டணம் செலுத்தி ( 5-12 வகுப்பு மாணவர்கள்) உறுப்பினர்களாக சேர்த்து விடுவது என்பது நாட்டிற்கே ஒரு முன் மாதிரியாக அமையும்.

குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்திட பள்ளி நூலகமும், அரசு நூலகங்களும் கை கொடுத்து தூக்கி விடும்போது, மாணவர்களிடம் நல்ல மாற்றம் உருவாகும். செல்போன் பிடியில் இருந்து மாணவர்களை விடுவிக்க வாசிப்பின் வாசல்கள் அனைத்து பக்கமும் திறந்தே இருக் கட்டும். - ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அய்யம்பாளையம் திண்டுக்கல் மாவட்டம்

SCROLL FOR NEXT