சிறப்பு கட்டுரைகள்

நேரு பிறந்தநாள் குழந்தைகள் தினமானது எப்படி?

செய்திப்பிரிவு

குழந்தைகள் என்றால் நேருவிற்கு மிகவும் பிடிக்கும். அவர் எங்கு போனாலும் “நேரு மாமா ! நேரு மாமா! ” என்று குழந்தைகள் அவரைச் சுற்றி சூழ்ந்து கொள்வார்கள். குழந்தைகள் அன்புடன் சூட்ட வரும் மாலையை ஆசையாக தலை குனிந்து பெற்றுக் கொள்வார் நேரு. தம் கழுத்தில் விழும் மாலைகளைக் குழந்தைகளிடமே திருப்பி வீசி விளையாடுவார். குழந்தைகளும் அதை எகிறிப் பிடிப்பார்கள். இதைப் பார்த்து கல கலவென்று சிரிப்பார் நேரு. எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் சரி, குழந்தைகளைக் கண்டு தட்டிக் கொடுப்பதில் அவருக்கு அப்படியொரு உற்சாகம்.

அதனால் குழந்தைகள் அவரை உரிமையோடு அணுகுவார்கள். சிறிதும் பயப்படமாட்டார்கள். குழந்தைகள் வணக்கம் சொன்னால், தவறாமல் வணக்கம் சொல்லுவார். தமது பிறந்தநாளை பிரமாதப்படுத்திக் கொண்டாடுவதை அவர் அவ் வளவாக விரும்பவில்லை. அதனால் 1954-ல் ஒரு வேண்டுகோள் வைத்தார்.

“என் பிறந்தநாள் அன்று எவரும் பெரிய ஆடம்பரம் செய்ய வேண்டாம். ஒரு சின்ன ஆசை எனக்கு.., என் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுவதை நான்மிகவும் விரும்புகிறேன். இன்றைய குழந்தைகள் தான் நாளைய தலைவர்கள். அவர்களது நலனுக்காகப் பாடுபடுங்கள். அவர்களை அன்பாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களை பிரபல விஞ்ஞானிகளாக, மேதைகளாக, தலைவர் களாக உருவாக்குங்கள் அதுதான் தேவை” என் றார். அதனால் 1954-ல்இருந்து நேரு பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT