சிறப்பு கட்டுரைகள்

வரம் தந்த வாக்கன் மீன்

செய்திப்பிரிவு

ஒரு ஊருல ஒரு ஏழை குடும்பம் சாப்பிடவே கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. அவங்க ஒரு மீனவர் குடும்பம். அந்த குடும்பத் தலைவர் கடலுக்கு போவார்.அந்த நேரத்துல அவங்க குடும்பம் உயிரைக் கையில பிடிச்சிகிட்டு இருப்பாங்க. அவங்க வீட்ல மொத்தம் 6 பேர் இருந்தாங்க. ஒருநாள் அப்பா கடலுக்கு மீன் பிடிக்க போனார். அவரு போயிட்டு வரும்போது அவங்க வீட்டுல எல்லோரும் கும்பல் போட்டு நின்னுட்டு இருந்தாங்க. அழுகை சத்தம் கேட்குது.

என்னன்னு அவர் கிட்டப்போய் பார்த்தார். அவருக்கு உயிர் போகும் அளவுக்கு வேதனை. ஆமாம், அவங்க மனைவி இறந்துபோயிட்டாங்க. மூன்று குழந்தைகளும் அழுறாங்க. இனிமேல் என்ன செய்வது என அப்பாவும் சேர்ந்து அழுதார். அப்போது குழந்தைகள் 3 வந்து அப்பாவை சமாதானம் செய்தார்கள். அப்பா குழந்தைகளுக்காக சமாதானம் ஆனார்.

மறுநாள் விடிந்தது. அப்பா கவலையை விட்டுவிட்டு குழந்தைகளுக்காக மீன் பிடிக்கச் சென்றார். மீன்கள் மாட்டியதும் வலையோடு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். பிடித்து வந்த மீன்களை எடுத்துப் பார்த்தார். அதில் ஒரு மீன் மட்டும் மின்னும் நட்சத்திரம் போல ஜொலித்தது. அந்த மீனின் பெயர் வாக்கன். அது அப்பாவைப் பார்த்து,“என்ன யானியன் உன் மனைவி இறந்து போய்விட்டாளென வருத்தப்படுகிறாயா?” என்று கேட்டது.

அப்பா ஆச்சரியப்பட்டார். மீன் சொன்னது, “உனக்குநான் பல வரங்கள் கொடுப்பேன். அவற்றை செயல்படுத்திக்கொள்” என்றது. மீன் சொன்னதைக்கேட்டு சிறிது நேரம் சிந்தித்த பிறகு, “எனது கஷ்டங்களைத் தீர்க்க வந்த ஜொலிக்கும் வாக்கன் மீனே நான் ஒரு பாவமும் செய்யக்கூடாது. சாகும்வரை உழைத்து பணக்காரனாக வர வேண்டும்” என்றார்.

வாக்கன் மீனும் அந்த வரத்தைக் கொடுத்தது. சில மாதங்கள் கடந்தன. அப்பா அந்த கடலோர கிராமத்தின் தலைவரானார். அந்த கிராமத்திலேயே அவர்தான் பெரிய பணக்காரர். ஆனாலும், மீன் பிடிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்தார்.

நீதி: செய்யும் தொழிலே தெய்வம். எந்த தொழிலாக இருந்தாலும் அதைக் கேவலமாக நினைக்காமல் மனதார செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். அது செருப்பு தைக்கும் வேலையா இருந்தாலும் சரி, குப்பை அள்ளும் வேலையாக இருந்தாலும் சரி. கஷ்டப்பட்டு வேலை செய்தால் அந்த வேலை உயிரையே காக்கும். - மு.பூஜா, எம்.பி.என்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குரோம்பேட்டை, சென்னை,

SCROLL FOR NEXT