சிறப்பு கட்டுரைகள்

அனுபவ அறிவு

செய்திப்பிரிவு

ஒரு மழைக்காலம் வெளியே விளையாடச் செல்ல முடியாத காரணத்தால், தன் பாட்டியிடம் கதை சொல்லச் சொன்னான். ராமு, பாட்டியும் கதைச் சொல்லத் தொடங்கினார். “நாம் தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நடப்பதைப் பார்த்திருப்போம் அல்லவா! அதுபோல பட்டிமன்றத்திற்காக 6 பேர் மாட்டு வண்டியில் பேச்சாளராகச் சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில் திடீரென்று மரம் முறிந்து வண்டியின் மேல் விழுந்தது. அதில் 5 பேருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. ஆனால், ஒரு நபருக்கு மட்டும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

எனவே, பக்கத்தில் ஏதும் மருத்துவமனை உள்ளதா என்று பார்க்க, எந்த மருத்துவமனையும், ஏன் வீடுகள் கூட இல்லை. தொலைவில் ஒரே ஒரு சின்ன வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டில் ஒரு பையன் ஒருவன் இருந்தான். அவனிடம் உதவி கேட்க, அவனும் வீட்டிற்குள் சென்று சில மூலிகைகளை எடுத்து வந்து அவருக்கு முதலுதவி செய்தான். அப்போது நீங்கள் மருத்துவரா என்று கேட்க, இல்லை நான் மருத்துவர் இல்லை என்று கூறினான். அப்போ எப்படி இதை செய்தீர்கள் என்று கேட்க? என் தாத்தா ஒரு வைத்தியர், அவர் மற்றவர்களுக்கு கட்டு போடுவதை பார்த்துதான் நான் கற்றுக்கொண்டேன் என்றான். பொழுது சாய்ந்தது. அவர்களும் அங்கே ஓய்வு எடுத்தனர். விடிந்ததும் அவர்கள் அந்த பையனுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றனர். அவர்கள் பட்டிமன்றத்தில் வெற்றி பெற்றனர். வீடு திரும்பும்போது மருத்துவரை அணுகியதும் அந்த சிறுவன்தான் உங்களுடைய கால் குணமானதற்கு காரணம் என்றார். அவனுக்கு இருந்தது படிப்பு அறிவு இல்லை. அனுபவ அறிவு சிறந்தது. பெரியோர்கள் அனுபவ அறிவு பெற்றவர்கள். எனவே அவர்களை மதியுங்கள். - பா. ஹாரிகா 9-ம் வகுப்பு, நவ பாரத் வித்யாலயாசீனியர் கெண்டரிப் பள்ளி,இ.வெள்ளனூர், திருச்சி.

SCROLL FOR NEXT