சிறப்பு கட்டுரைகள்

வெற்றி நூலகம்: இதுவரை அறிந்திடாத பாபாசாகேப் அம்பேத்கர்

செய்திப்பிரிவு

பொருளியல் பாடப்பிரிவில் கொலம்பியா மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றவர், இந்திய அரசியலர்களில் மெத்தப் படித்தவர் என்பதெல்லாம் டாக்டர் அம்பேத்கர் குறித்துப் பரவலாக அறிந்ததே. அதே போல சட்டமேதையான அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்பதும் பலருக்குத் தெரியும். ஆனால், அத்தகைய மாபெரும் தலைவரை அரசியலமைப்பு நிர்ணய சபையில் நுழையவிடாமல் தடுக்க முயன்றனர் என்பதும், தடைகள் பல கடந்து 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் கடும் உழைப்பை செலுத்தி உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பை உருவாக்கினார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

நவீன இந்தியாவின் பிதாமகன் என ஒருவரை அழைக்க முடியும் என்றால் அது பாபாசாகேப் அம்பேத்கராகத்தான் இருக்க முடியும். ஏனெனில் ஏற்றத்தாழ்வும் பாகுபாடும் சகஜமாக காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் தேசத்தில் நீதியும் விடுதலையும் சமத்துவமும் ஜனநாயகமும் எல்லாருக்கும் சொந்தம் என்ற பார்வையை கற்பனாவாதமாக முன்வைக்காமல் சட்டமாக இயற்றியவர் அம்பேத்கர். இந்தியாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சிந்தனையாளர்கள், பல செயற்பாட்டாளர்கள் தாக்கம் செலுத்தி இருக்கிறார்கள். ஆனால், ஒரே நபர் சீரிய சிந்தனையாளராகவும் புரட்சிகர செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தது அரிது. அத்தகைய தலைவர்களில் முதன்மையானவர் அம்பேத்கர்.

இந்தியாவின் 75-வது விடுதலை நாளை கொண்டாடும் இச்சமயத்தில் சட்ட மேதை, அரசியல் பேராளுமை, சமூக செயற்பாட்டாளர், பொருளாதார அறிஞர், சிந்தனையாளர், ஆய்வாளர், இதழியலாளர், கல்வியாளர் உள்ளிட்ட பன்முகத்தன்மை கொண்ட அண்ணல் அம்பேத்கர் குறித்து 'இந்து தமிழ்' நாளிதழில் இதுவரை வெளிவந்த சிறப்பான கட்டுரைகளின் தொகுப்பாக 'பாபாசாகேப் அம்பேத்கர் : ஒரு பன்முகப் பார்வை’ புத்தகம் வெளிவந்துள்ளது.

நூல் தலைப்பு : ‘பாபாசாகேப் அம்பேத்கர் : ஒரு பன்முகப் பார்வை’

விலை : 220/-

சிறப்பு தள்ளுபடி : 176/- (20% கழிவு தபால் செலவு இலவசம்.)

மேலும் விபரங்களுக்கு : 7401296562 / 7401329402 / 044 - 35048073

ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/all-books

SCROLL FOR NEXT