சிறப்பு கட்டுரைகள்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: பாளையங்கோட்டை பழைய செஞ்சிலுவை சங்க கட்டிட வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகள் விளையாடுவதற்காக புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவை திறந்து வைத்து ஆட்சியர் வே. விஷ்ணு கூறியதாவது: மாவட்ட நிர்வாகத்தின் மூலம்பாளையங்கோட்டையில் தொடங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதார வள மையத்தில் மனவளர்ச்சி குன்றியோரில் 6 வயதுக்குஉட்பட்டோருக்கான ஆரம்ப நிலைபயிற்சி மையம், 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி மையம், ரெடிங்டன் பவுண்டேசன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வழங்குவதற்கான கணினி பயிற்சி மற்றும் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு வரும் குழந்தைகள் விளையாடவும், அவர்கள் உடல் ரீதியான பயிற்சி பெறவும் புதிய பூங்கா புஷ்பலதா கல்வி நிறுவனம் மூலம் ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு பூங்காவில் 5 வயது முதல் 14 வயது வரையிலான மாற்றுத்திறன் குழந்தைகள்பெற்றோர் அல்லது பாதுகாப்பாளருடன் வந்து விளையாடலாம். இதன் மூலம் அவர்களுக்கு உற்சாகமும், புத்துணர்வும் பெறுவர்.

SCROLL FOR NEXT