கோவை மதுக்கரை அரசு ஆரம்பப் பள்ளியில் பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் காவலர். 
சிறப்பு கட்டுரைகள்

கோவையில் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ திட்டத்தின் மூலம் 58 ஆயிரம் மாணவர்களுக்கு பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ சிறப்புத் திட்டத்தின் மூலம், இதுவரை 58 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.

பாலியல் குற்றங்கள், தண்டனைகள் குறித்து மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ளும் வகையில், கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ என்ற சிறப்புத் திட்டம் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், 1 முதல் 12-ம் வகுப்பு வரை யுள்ள மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

10 வயதுக்கு குறைவான குழந்தை களுக்கு தவறான தொடுதல், பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? அது தொடர்பாக யாரிடம் தெரிவிக்க வேண்டும்? என்பது குறித்து விளக்கப்படுகிறது.

10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் குற்றங்கள், அதற்குரிய தண்டனைகள், பாலியல் குற்றத்தில் கைதாகி சிறைக்கு சென்று வந்தால் எதிர்கால வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள், சமூக வலைதளங்களை கையாளுவது குறித்து விளக்கப்படுகிறது.

10 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் என்றால் என்ன, பாலியல்உறவில் ஈடுபடுவதால் ஏற்படும் உடல்,மன ரீதியிலான மாற்றங்கள், எதிர்கால பாதிப்புகள், சமூகவலைதளங்கள் கையாளுதல் குறித்து விளக்குகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறும்போது, “கோவை மாவட்டத்தி லுள்ள ஒவ்வொரு காவல் நிலை யத்திலும் மகளிர் நல அலுவலர், குழந்தை நல அலுவலர் என இரண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

இதுவரை 58 ஆயிரம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டுள்ளது. இதன்மூலம் வளர்ப்பு தந்தையால் பாதிக்கப்பட்ட சிறுமி, நண்பரால் பாதிக்கப்பட்ட சிறுமி எனஇரண்டு பேர் தைரியமாக முன்வந்துதங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை தெரிவித்தனர். அவர்களுக்கு துன்புறுத்தல் அளித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT