சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள "பி வெல் பன்நோக்கு மருத்துவமனைகள்" சார்பில் பள்ளி மாணவர்களுக்காக "ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்" என்ற தலைப்பில் ஆன்லைனில் வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது.
இதுகுறித்து "பி வெல் பன்நோக்கு மருத்துவமனைகள்" நிறுவனத் தலைவர் டாக்டர்சி.ஜெ.வெற்றிவேல் கூறியதாவது: எங்கள் மருத்துவமனையின் 10-ம் ஆண்டு விழாவில் வழக்கமான கொண்டாட்டங்களுடன் இந்தாண்டுமக்களுக்குப் பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினோம்.
அதன்படி, சாலை விபத்துஏற்படும்போது "கோல்டன்அவர்" என்ற சொல்லப்படும் அந்த அவரச நேரத்தில் முதலுதவி செய்து உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது அவசியம்.
இதுகுறித்து பொதுமக்களிடம் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். வீடு, பள்ளிக்கூடம், பொது இடங்களில் விபத்து நடந்தால் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்கு முதலுதவி எவ்வளவுமுக்கியம் என்ற செய்தியை இளைஞர்களுக்கு கொண்டு செல்லவிருக்கிறோம்.
பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த விழிப்புணர்வை ஆன்லைன் வினாடி வினா மூலம் ஏற்படுத்தி, அதில்வெற்றி பெறும் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும். வினாடி வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான குழந்தைகள் ஜூலை 20-ம் தேதிக்குள் என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். வரும் 22-ம்தேதி முதல்கட்ட தேர்வு நடைபெறும். 24-ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படும். இந்த ஆன்லைன் வினாடி வினா போட்டியை
பிரபலமான ‘‘எக்ஸ் குவிஸ் ஐடி’’ என்ற நிறுவனம் நடத்துகிறது.
எதிர்காலத்தில் பள்ளி நிர்வாகங்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் உரிய நிபுணர்களைக் கொண்டு விபத்து நேரத்தில் முதலுதவி எவ்வளவு முக்கியம் என்பதை ‘‘முதலுதவி மற்றும் அவசரகால செயல்பாடுகள்’’ என்ற தலைப்பில் பள்ளிகளிலேயே நேரடியாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கவும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு சி.ஜெ.வெற்றிவேல் தெரிவித் துள்ளார்.