சிறப்பு கட்டுரைகள்

‘அகிட்டு’ திருவிழா ஆரம்பம்!

செய்திப்பிரிவு

2025-ம் ஆண்டு பிறந்துவிட்டது. இந்த ஆண்டு நம் மாணவச் செல்வங்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக அமைய வாழ்த்துகள். புத்தாண்டு என்றதும் அதனுடன் ஒட்டிப்பிறந்த உறுதிமொழியும் நினைவுக்கு வந்துவிடுகிறது. இப்படிப் புத்தாண்டை முன்னிட்டு உறுதி ஏற்கும் பழக்கம் இன்றல்ல நேற்றல்ல 4000 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

பழங்கால நகரமான பாபிலோனியாவில் ‘அகிட்டு’ என்கிற பெயரில் 12 நாள்கள் உறுதிமொழி திருவிழா புத்தாண்டையொட்டி கொண்டாடப்பட்டது. அப்போது மன்னராட்சி காலம் என்பதால் பொதுமக்கள் அரசரிடம் புத்தாண்டில் தாங்கள் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை அளிப்பது வழக்கமாம். முக்கியமாக முந்தைய ஆண்டில் தாங்கள் கடன் வாங்கிய பண்டங்களையும் பொருள்களையும் உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டியது ஐதீகம்.

காலப்போக்கில் இந்த வழக்கம் மருவி தனக்குத்தானே உறுதி ஏற்று அதைக் கடைப்பிடிக்கும் பழக்கம் வந்துவிட்டது. அதுசரி, 2025 புத்தாண்டில் நீங்கள் ஏற்ற உறுதிமொழி என்ன, அதைவிட முக்கியமாக ஏற்ற உறுதிமொழியை நிறைவேற்ற என்ன திட்டம் தீட்டியுள்ளீர் என்பதை, ‘புத்தாண்டில் புதிய நான்’ என்கிற தலைப்பில் 100 சொற்களுக்கு மிகாமல் எழுதி vetrikodi@hindutamil.co.in மின்னஞ்சலுக்கு உங்கள் பெயர், வகுப்பு, பள்ளி விவரம், அலைபேசி எண், ஒளிப்படத்துடன் அனுப்புங்கள் மாணவர்களே. சிறந்த பதிவு பிரசுரிக்கப்படும்.

SCROLL FOR NEXT