சிறப்பு கட்டுரைகள்

வரிசையில் நிற்பதை தவிர்க்கும் யுபிஐ

செய்திப்பிரிவு

உணவு ஆர்டர் செய்ய, ஆன்லைனில் பொருட்கள் வாங்க, ரயில், விமான டிக்கெட் எடுக்க என்று கையில் பணமின்றி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு உறுதுணையாக இருப்பது யுபிஐ. யுபிஐ எனப்படும் யுனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் என்றால் என்ன தெரியுமா?

பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பாபாசாகேப் அம் பேத்கர் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ஆர்பிஐ) என்ற தலைமை வங்கியை தொடங்குவதற்காக ஹில்டன் யங் கமிஷன் அமைத்தார். பின்னர், ஆர்பிஐ 1935 ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வங்கியை தலைமையகமாகக் கொண்டு நாடு முழுவதும் வங்கிகள் பல தொடங்கப்பட்டன. பண்டமாற்ற முறையை அதுவரை பின்பற்றி வந்த மக்கள் வங்கிகள் தொடங்கப்பட்டதன் மூலம் அருகில் உள்ள வங்கியில் கணக்கு வைத்துக் கொண்டு பணம் எடுக்க, செலுத்த ஆரம்பித்தனர்.

இதன் மூலம் சாமானிய மக்களிடமும் பணப்புழக்கம் பரவலானது. காலப்போக்கில் பண பரிவர்த்தனையை எளிமைபடுத்த அட்டை கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்கும் வரிசையில் நின்று தன்னுடைய முறை வரும்போதே இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க முடியும்.

இந்நிலையை மாற்றியது தான் யுபிஐ. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) மூலம் யுபிஐ 2016-ல்அறிமுகப்படுத்தப்பட்டது. யுபிஐபேமண்ட் தனி நபரால் கண்டுபிடிக்கப்படவில்லை. இது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும்.

யுபிஐ என்பது நிகழ்நேர கட்டண முறை ஆகும்.இது தொடங்கப்பட்ட பின் இந்தியாவில் அனைவரும் எளியவழியில் பணப்பரிவர்த்தனை செய்யமுடிகிறது. இது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிதி தொழில் நுட்பத் துறை நிபுணர்களின் கூட்டு முயற்சியில் விளைந்த சிறந்த கண்டுபிடிப்பாகும்.

கைபேசி எண் இருந்தாலே போதும் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை எளிதாக இருக்கிறது. ஜி.பே, போன் பே, பே.டி. எம் உள்ளிட்ட அனைத்து செயலிகளும் யுபிஐ உடன் இணைந்து செயல்படுகின்றன. இன்று பணப்பரிவர்த்தனை செய்வதற்கான செயலிகள் அதிகம் உள்ளன. ஆனால்,போலி செயலிகளை தவிர்த்து அங்கீகரிக்கப்பட்ட, நம்பகமான செயலிகளை நாம் பயன்படுத்தினால் பணத்தை பத்திர படுத்திக் கொள்ளலாம்.

SCROLL FOR NEXT