சிறப்பு கட்டுரைகள்

சுதந்திர சுடர்கள்: போலியோவை ஒழித்த திட்டம்

முகமது ஹுசைன்

போலியோவால் உடல் ஊனமுற்ற பெரியவர்களை இன்றும் நாம் காணமுடியும். ஆனால், போலியோவால் ஊனமுற்ற ஒரு குழந்தையைக்கூட நாம் காண முடியாது. அதற்குக் காரணம் 1995இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பல்ஸ் போலியோ திட்டம்'.

இளம்பிள்ளைவாதம் என்கிற போலியோமைலிட்டிஸ் ஒரு தீவிரமான தொற்றுநோய். பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அது பாதிக்கும். இந்தவைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும். 1970-களில் போலியோவால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 குழந்தைகள் ஊனமுற்றனர்.

இதைக் கட்டுப்படுத்தவே ‘பல்ஸ்போலியோ திட்டம்' தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு உலகளவில்போலியோவால் பாதிக்கப்பட்டோ ரில், 60 சதவீதம் பேர் இந்தியாவிலிருந்தனர். போலியோ பாதிப்பைஇந்தியாவால் கட்டுப்படுத்த முடியாது என்பதே உலக நாடுகளின் கணிப்பாக இருந்தது. ஆனால், பல்ஸ் போலியோ திட்டத்தின்கீழ் விரிவான பிரச்சாரம், விழிப்புணர்வு விளம்பரங்கள் மூலம், போலியோபாதிப்பு இந்தியாவில் வெகுவாகக்குறைந்தது. உலக அளவில்வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட சுகாதாரத் திட்டங்களில் ஒன்று இது.

இந்தியாவை போலியோ இல்லாத நாடாக 2015இல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்தத் திட்டத்தின்கீழ், 0-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தற்போதும் வழங்கப்படுகிறது. போலியோ வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடு என்கிற பெருமையையும் இந்தத் திட்டம் இந்தியாவுக்குப் பெற்றுக்கொடுத்தது.

கடைசியாக 2011 ஜனவரி 13 அன்று மேற்கு வங்கத்தில் போலியோ பாதிப்பு பதிவானது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக போலியோ பாதிப்பற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. தமிழ்நாடு கடந்த 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக விளங்குகிறது.

SCROLL FOR NEXT