மின்னணு மற்றும் மின் சாதனங்கள் அனைத்தையும், மறுபயன்பாடு செய்ய முடியாத சூழலில் அவை இ-கழிவுகள் ஆகின்றன. சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இ-கழிவுகளை அதிக அளவில் வெளியேற்றும் நாடாக இந்தியா உள்ளது.
உதாரணத்துக்கு, சென்னையில் மொபைல் கடை ஒன்றில் நீங்கள் வாங்கி பயன்படுத்தும் அலைபேசியை ஓரிரு ஆண்டுகள் கழித்து உங்கள் வீட்டருகில் தூக்கி எறிந்து விடுகிறீர்கள். இப்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 5 கோடி டன் இ-கழிவு வெளியேற்றப்படுகிறது என்று முன்பே பார்த்தோம்.
இந்நிலையில் மின்னணு கழிவை சேகரிப்பவர்கள் அந்த அலைபேசியின் பிராண்டை பொருத்து அதை பிரித்தெடுத்து உரிய நிறுவனத்திடமோ அல்லது பழுது பார்த்து மீண்டும் விற்பனை செய்பவர்களிடமோ ஒப்படைப்பார்கள்.
மின் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்கீழ், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான காலம் (180 நாட்களுக்கு மேல்) நீட்டிக்க வேண்டும். மின் மற்றும் மின்னணு பொருட்களை தயாரிப்பதில் ஈயம், பாதரசம் மற்றும் காட்மியம் போன்ற அபாயகரமான பொருட்களின் பயன்பாட்டை இந்த விதிகள் கட்டுப்படுத்துகிறது.
இதை தடுப்பதற்காக மின்சாதனங்களின் தயாரிப்பாளர்கள், புதுப்பிப்பவர்கள், அகற்றுபவர்கள் மற்றும் மறுசுழற்சி செய்பவர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய விதியான எலக்ட்ரானிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2022 செயல்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2022 குறிப்பிட்ட 4R : குறைத்தல், மறுபயன்பாடு, பழுது பார்த்தல், மறுசுழற்சி (Reduce, Reuse, Repair, Recycle) என்பதே இதன் நோக்கமாகும்.
மின்கழிவுகளை பிரித்தெடுக்கும் பணியாளர்களுக்கு சவுகரியமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. எலக்ரானிக் தயாரிப்புகளில் அதிகப்படியான வேதி பொருட்கள் உள்ளன.அதுமட்டுமின்றி கூர்மையான சாதனங்களை பிரித்தெடுக்கும்போது அவற்றால்கைகளில், கண்களில் காயம் ஏற்படுகிறது. அதனால் இதை பிரித்தெடுப்பவர்களின் உடல்நலன் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இந்த கழிவுகளால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு செயல்படவேண்டும். அதற்காகதான், நிரந்தர செயல்பாட்டு விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை 2024 மற்றும் 2025-ல் முறையே 70 சதவீதம் மற்றும் 80 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
இதனிடையே 2023-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 60 சதவீத எலக்ட்ரானிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்தாக வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், அதில் பாதி அளவுகூட இன்னும் எட்டப்படவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய நிதர்சனம்.