சிறப்பு கட்டுரைகள்

காடுகளை பாதுகாப்பது யார்?

ஸ்ரீ. பாக்யலஷ்மி ராம்குமார்

காட்டில் பழங்குடியினர் வாழ்கிறார்கள். அவர்கள் இயற்கையை அழிக்காமல், தானும் வாழ்ந்து வனத்தையும் செழிப்பாக வைத்திருந்தார்கள். இதைத்தான் “காடு காத்து உறையும் கானவர் உளரே” என்று சங்க இலக்கிய பாடல் கூறுகிறது.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் எதற்கு?

பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்த நாடாக இந்தியா இருக்கிறது. இருப்பினும் உயிரினங்கள் பல அழியும் அபாயத்தில் உள்ளன. அந்தமான் காட்டு பன்றி, புலிகள், காட்டு ஆந்தை, பனி சிறுத்தை, ஆசிய யானை, உள்ளிட்ட 81 வகையான உயிரினங்கள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. காட்டு யானை ஒருமுறை லத்தி போட்டால் அதில் இருந்து ஏராளமான மர விதைகள் முளைக்கும் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். காடுகளை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு உயிரினங்களுக்கு உண்டு. அவ்வாறு இருக்கையில் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டதால் சுற்றுச்சூழலில் சமனற்ற நிலை உருவாக தொடங்கிவிட்டது.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

வனவிலங்கு சட்டம் 1972-ன் மூலம் முதன்முறையாக, இந்தியாவில் அழிந்து வரும்வனவிலங்குகளின் விரிவான பட்டியல் தயாரிக்கப்பட்டது. விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களுக்கு இந்த சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது.

சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் சுவிட்சர்லாந்து அரசாங்கம் ‘சைட்ஸ்’(CITES) என சுருக்கமாக அழைக்கப்படும் காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் அழிந்து வரும் உயிரினங்களில் சர்வதேச வர்த்தகத்தை தடுப்பதற்கான மாநாடு 1973 மார்ச் 3-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை வாஷிங்டன் மாநாடு என்றும் அழைப்பது உண்டு. இம்மாநாட்டில் 184 நாடுகள் பங்கேற்றன. அதில் இந்தியாவும் ஒன்று. இந்த மாநாட்டின் விளைவாக அருகிவரும் வனவிலங்குகளை வேட்டையாட தடைவிதிக்கப்பட்டது. அப்போது தான் இது வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் போன்றவற்றை நிறுவுவதற்கு வழிவகுத்தது.

SCROLL FOR NEXT