மு தல் உலகப்போரில் லட்சக்கணக்கானோர் காயம்பட்டபோது அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும் பென்சிலின் போன்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உள்ளது.
ராணுவ மருத்துவமனைகளிலும் அலெக் சாண்டர் பிளமிங் பணிபுரிந்துள்ளார். அப்போதெல்லாம், காயங்கள் ஏற்பட்டால் புரையோடாமல் இருக்க (செப்டிக்) கார்போலிக் அமிலம்,போரிக் அமிலம், ஹைட்ரஜன் பொராக்சைடு போன்றவற்றை கொண்டு சிகிச்சை செய்தனர். லேசான சிராய்ப்பை குணப்படுத்த மட்டுமே இந்தமருந்துகள் உதவின. ஆனால், ஆழமானகாயங்களுக்கு இவற்றை பயன்படுத்தப் படுத்தினால் வெள்ளை அணுக்களை அழித்து இயல்பாகவே உள்ள நோய்த்தடுப்பாற்றல் பாதிக்கப்படும் என்பது அறியப்படாமலேயே இருந்தது. இதனை ரைட் அவர்களும் பிளமிங் அவர்களும் கண்டறிந்து விளக்கினர். ஆனாலும் ராணுவத்திலிருந்த மருத்துவர்கள் இவர்களுக்கு செவி சாய்க்கவில்லை. இதனால் காப்பாற்றக் கூடிய நிலையிலிருந்த பல போர் வீரர்களும் மடிந்தனர்.
1919-ல் ராணுவத்திலிருந்து விடைபெற்று லண்டனிலிருந்த செயின்ட் மேரி மருத்துவப் பள்ளி மற்றும் மருத்துவமனை பணியில் பிளமிங் சேர்ந்தார். இந்த நேரத்தில்தான் இயல்பாகவே மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத கிருமிநாசினியைக் கண்டறிய முனைந்தார். அந்த நேரத்தில்தான் தனது மூக்கிலிருந்து வெளிப்பட்ட திரவத்தில் லைசோசைம் என்ற இயற்கை கிருமிநாசினி இருப்பதைக் கண்டறிந்ததோடு இந்த வகை கிருமிநாசினியால் உடலின் தடுப்பாற்றலுக்கு எந்தவகையான பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதையும் கண்டறிந்தார்.
தேடி வந்த பரிசு: கண்ணீர், உமிழ்நீர், சளி போன்றவை கிருமிகளைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அவை கிருமிகளைக் கொல்லும் சக்தி படைத்தவை என்பதை கண்டறிந்தார்.
இதனிடையே தட்டிலிருந்து பிரித்தெடுத்த பூஞ்சையான பென்சிலின் தொடர்பான ஆய்வு சிக்கலுக்குள்ளானது. இவர் கண்டறிந்த பென்சி லின் மீது ஏகப்பட்ட விமரிசனங்கள் எழுந்தன.
1928-லேயே பென்சிலினை கண்டறிந்து விட்டாலும் அதனை பிரித்தெடுப்பது கடினமானதால் பெளிமிங்கால் பெரிய அளவுக்கு உற்பத்தி செய்ய இயலவில்லை. பிறகு 1940 வாக்கில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் ஹேவார்டு புளோரி மற்றும் போரிஸ் செயின் ஆகியோரின் கவனத்தை பென்சிலின் ஈர்த்தது. அவர்கள் கூட்டாக ஆராய்ச்சி செய்து பென்சிலின் மருத்துவ ரீதியாக பலனுள்ளதாக மாற்றினர்.
இதனிடையே இரண்டாம் உலகப்போர் மூண்டது. ஏராளமான போர் வீரர் களின் காயம் ஆற்றும் அருமருந்தாக பெனிசிலின் செயல்பட்டது. பல்லாயிரக் கணக்கானோர் உயிர்பிழைக்க பெனிசிலின் உதவியதை வரலாறு பதிவு செய்தது. பென்சிலின் கண்டுபிடிப்பிற் காக பிளமிங் உட்பட மூவருக்கும் கூட்டாக 1945-ல் நோபல் பரிசு கிட்டியது.
தன்னடக்கத்தின் வடிவமாக விளங்கியபிளமிங் தனக்கும் அந்த கண்டுபிடிப்புக்கும் அதிக தொடர்பில்லாதது போலவே செயல்பட்டார். 1945-ல் அமெரிக்காவில் பிளமிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள வேதியியல் நிறுவனங்கள் இவரது சேவையைப் பாராட்டிநன்றியுணர்வுடன் ஒரு லட்சம் பவுண்ட் தொகையை நன்கொடையாக அளித்தது. அதனைஅவர் தமக்காகப் பெற்று கொள்ளவிரும்பவில்லை மாறாக அந்த தொகையை அப்படியே தாம் பணியாற்றிய நிறுவனமான செயிண்ட் மேரி மருத்துவமனை மற்றும் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்துவிட்டார்.
- கட்டுரையாளர்:பள்ளி தலைமையாசிரியர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு:thulirmadhavan@gmail.com