தொடர்கள்

டிங்குவிடம் கேளுங்கள் - 46: சூரியன் தெற்கில், வடக்கில் ஏன் உதிப்பதில்லை?

Guest Author

சூரியன் ஏன் தெற்கிலோ வடக்கிலோ உதயமாகவில்லை, டிங்கு? - ர. பரணிதா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. அது எப்போதும் ஒளியையும் வெப்பத்தையும் உமிழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சூரியனை மையமாக வைத்து பூமி உள்பட சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் சுற்றி வருகின்றன.

பூமி தானும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றும்போது இரவு, பகல் ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். பூமி கிழக்கு திசை நோக்கிச் சுற்றுவதால் சூரியன் கிழக்கில் உதிப்பதுபோல் நமக்கு தோன்றுகிறது. தெற்கு திசை நோக்கியோ வடக்கு திசை நோக்கியோ சுற்றினால் சூரியன் அந்தத் திசையில் உதிப்பதாகத் தோன்றும், பரணிதா.

SCROLL FOR NEXT