தொடர்கள்

டிங்குவிடம் கேளுங்கள் - 44: கிவியைபற்றி தெரியுமா?

செய்திப்பிரிவு

கிவியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா டிங்கு?

- சி. மதுமிதா, திருப்பரங்குன்றம்.

நீங்கள் எந்தக் கிவியைப் பற்றிக் கேட்கிறீர்கள், மதுமிதா? கிவி என்கிற பெயரில் ஒரு பறவையும் இருக்கிறது. ஒரு பழமும் இருக்கிறது. நியூஸிலாந்தின் தேசியப் பறவை கிவி. கோழி அளவுள்ள சிறிய பறவை. அலகு நீளமாக இருக்கும். பறக்க இயலாத பறவைகளில் இதுவும் ஒன்று.

இரவு நேரத்தில் இரை தேடிச் செல்லும். பழுப்பு தோலும் பச்சை சதையும் சிறிய கறுப்பு விதைகளுமாக இருக்கக்கூடியது கிவி பழம். புளிப்புச் சுவையுடன் இருக்கும் இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. ஆனால், விலைதான் அதிகம். சீனா, சிலி, நியூஸிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகம் விளைகின்றன.

SCROLL FOR NEXT