அறிவியல்-தொழில்நுட்பம்

1,000 அரசு பள்ளிகளில் ‘அடல் டிங்கர்’ ஆய்வகம்

செய்திப்பிரிவு

கரூர்

மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தவும், சிறந்த மாணவர்களாக உருவாக்கவும் தமிழகத்தில் 1,000 அரசு பள்ளிகளில் தலா ரூ.20 லட்சத்தில் ‘அடல் டிங்கர்' ஆய்வகம் அமைக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்தார்.

கரூர் வெண்ணெய்மலையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற, 47-வது ஜவஹர்லால் நேரு அறிவியல்,கணித, சுற்றுச்சூழல் கண்காட்சி, அறிவியல் பெருவிழா, கணிதக் கருத்தரங்கை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், சிறந்த மாணவர்களாக உருவாக்குவதற்கும் 1,000 அரசுபள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் ‘அடல் டிங்கர்' ஆய்வகம் ஜனவரி மாதத்துக்குள் அமைக்கப்படும். பள்ளி அளவில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கவும், ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தவும் அமைக்கப்படும் இந்த ‘அடல் டிங்கர்' ஆய்வகம், ரோபோட்டிக் மற்றும் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் வகையிலான நவீன உபகரணங்களுடன் நிறுவப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT