நம்ம ஊரு நடப்பு

தேனி | எளிய பொருட்களை பயன்படுத்தி சூரிய நிழல் கடிகாரம் செய்வது எப்படி? - போடியில் மாணவர்களுக்கு பயிற்சி

செய்திப்பிரிவு

தேனி: எளிய பொருட்களை பயன்படுத்தி சூரிய நிழல் கடிகாரம், மழைமானி செய்வது எப்படி?

என்பது குறித்து போடியில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் வானியல் குறித்து மாணவர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, சூரிய நிழல் கடிகாரம், மழைமானி தயாரிப்பு மற்றும் அவை செயல்படும் முறை குறித்து பள்ளியின் அறிவியல் ஆசிரியை ஜி.சந்திரகலா செயல்விளக்கம் அளித்தார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பிச்சாண்டி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு
அறிவியல் ஆசிரியை ஜி.சந்திரகலா வானியல் பயிற்சி அளித்தார்.

7-ம் வகுப்பு மாணவர்கள் பாகைமானி, வெள்ளைத்தாள், உறிஞ்சுகுழாய் பயன்படுத்தி சூரிய நிழல் கடிகாரம் செய்தனர். அதேபோல், 8-ம் வகுப்பு மாணவர்கள் பிளாஸ்டிக் டப்பா, அளவுகோல், புனல், நாடா பயன்படுத்தி மழைமானி செய்துகாட்டினர். அவர்களை தலைமை ஆசிரியர் ஆர்.ஜெயக்குமார் ஊக்குவித்தார்.

SCROLL FOR NEXT