நடமாடும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தை எச்சிஎல் டெக் மூத்த ஆலோசகர் ஜி.எச்.ராவ், மயிலாப்பூர் காவல் உதவி ஆணையர் வி.சீனிவாசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். 
நம்ம ஊரு நடப்பு

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் ரூ.65.5 லட்சத்தில் நடமாடும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி

செய்திப்பிரிவு

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளிக்க சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் ரூ.65.5 லட்சம் செலவில் நடமாடும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.

எச்சிஎல் அறக்கட்டளை நிதியுதவியுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளிக்கு்ம் வகையில் மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் ரூ.63.5 லட்சம் செலவில் நடமாடும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை எச்சிஎல் டெக் மூத்த ஆலோசகர் ஜி.எச்.ராவ், காவல் உதவி ஆணையர் வி.சீனிவாசன் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் செயலாளர் சுவாமி சத்யஞானநந்தா, எச்சிஎல் அறக்கட்டளை குளோபல் சிஎஸ்ஆர் துணை தலைவர் நிதி பந்திர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நடமாடும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் மூலம், அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் குறித்த அடிப்படை பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT