ஆரணி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்கள் 
நம்ம ஊரு நடப்பு

ஆரணி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி: கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலைஆரணி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்தமாக 135 பரிசுகள் வென்று சாதனை படைத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கல்வி மாவட்ட அளவிலான வருடாந்திர விளையாட்டு போட்டிகளும் தடகள விளையாட்டுகளும் ஆரணியில் நடைபெற்றன. இதில் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 135 பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். தடகளப் போட்டியில் 4 தங்கமும், ஒரு வெண்கலமும் பெற்றனர்.

குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல் போட்டியில் 8-ம் வகுப்பு மாணவர் எம்.கனிஷ்கரும், நீளம் தாண்டுதலில் 10-ம் வகுப்பு மாணவர் பி.கோகுலும், ஈட்டி எறிதலில் 11-ம் வகுப்பு மாணவர் பி.மோகன்காந்தியும் தங்கம் வென்றனர். குழு விளையாட்டில் கேரம், ஹேண்ட் பால், லான் டென்னிஸ், ஹாக்கி, கோக்கோ, பால் பேட்மிட்டன், வாலிபால் ஆகியவற்றில் 15 பேர் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர்.

ஒட்டுமொத்தமாக 135 பரிசுகள் வென்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா.கருணாநிதி, உடற்கல்வி இயக்குநர் கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியை அமுதா, உடற்கல்வி ஆசிரியர் அன்புகுமரன், ஆசிரியர்கள் என்.சுப்ரமணி, பழனி. ராஜா, சதீஷ் ஆகியோர் பாராட்டினர்.

SCROLL FOR NEXT