ஒட்டன்சத்திரம் தொகுதி தாழையூத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். 
நம்ம ஊரு நடப்பு

ஒட்டன்சத்திரம் | அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்: அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்

செய்திப்பிரிவு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி கொக்கரக்கல்வலசு, கீரனுார், கோரிக்கடவு, தொப்பம்பட்டி, கள்ளிமந்தையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தாழையூத்தில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பொன்ராஜ், பழநி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர்கள் சசி, முத்துச்சாமி, மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக் கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT