சென்னை: வெற்றிக்கொடி பள்ளி நாளிதழை திருப்புட்குழி அரசு பள்ளி மாணவிகள் ஆர்வத்தோடு வாசிக்கும் காட்சியை தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்து தமிழ் திசை நாளிதழின் பள்ளி நாளிதழாக "வெற்றிக்கொடி" வெளிவருகிறது. இந்த நாளிதழை பள்ளி மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் ஆர்வத்தோடு படித்து வருகின்றனர்.
அவர்கள் தங்கள் படைப்புகளை வழங்கி இந்த நாளிதழ் மூலம் எழுத்து மற்றும் படைப்பாற்றலை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் திருப்புட்குழி அரசு பள்ளி மாணவிகள் வெற்றிக்கொடி நாளிதழை வகுப்பறையில் அமர்ந்து வாசித்தனர். இந்த காட்சியை "படி விருப்பப் படி" என்ற தலைப்பில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தனது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளது. இதற்குஏராளமானோர் "லைக்" கொடுத்து தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவிடுகின்றனர்.