கடலூர்: ஹிரோஷிமா -நாகசாகி நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சியில் நெய்வேலியில் பள்ளி மாணவர்கள் நடத்திய "போர் வேண்டாம்" மவுன நாடகம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
நெய்வேலியில் அறிவியல் இயக்கம் சார்பில் நெய்வேலி ஜவஹர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஹிரோஷிமா - நாகசாகி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் மரியா ஜோன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை தலைவர் தாமரைச்செல்வி வரவேற்றார்.
அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தாமோதரன் "அணுசக்தி அழிவிற்கு அல்ல, ஆக்கத்திற்கே" என்ற தலைப்பில் உரையாற்றினார். மாவட்ட தலைவர் பாலகுருநாதன், 1947- ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 7- ம் தேதி வரை "ஹிரோஷிமா நாகசாகி நினைவு தினம்" குறித்து வீடியோ காட்சிகள் மூலம் விளக்கினார்.
ஜவஹர் பள்ளி மாணவர்கள் "போர் வேண்டாம்" என்று மவுன நாடகம் நடத்தினர். விஞ்ஞானி அப்துல் கலாம் பெயரில் துளிர் இல்லம் தொடங்கப்பட்டது. ஆசிரியை ஷீலா நன்றி கூறினார்.