விதவிதமான பேப்பர் ஆடைகளை அணிந்து வந்து அசத்திய கோவை மாநகராட்சி பள்ளிக் குழந்தைகள். 
நம்ம ஊரு நடப்பு

கோவை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விதவிதமான பேப்பர் ஆடைகளில் அசத்திய குழந்தைகள்

செய்திப்பிரிவு

கோவை: கோவை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விதம், விதமான பேப்பர் ஆடைகளில் வந்து பள்ளிக் குழந்தைகள் அசத்தினர்.

கோவையில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளி லும் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் சார்பில், ‘எனது குப்பை, எனது பொறுப்பு' எனும் தலைப்பின்கீழ், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, கோவை மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ‘பேப்பர் டிரஸ்' போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில், நாளிதழ்கள், காலண்டர், பிளாஸ்டிக் கவர்கள், பேப்பர் கப், அட்டை ஆகியவற்றைக் கொண்டு விதவிதமான ஆடைகளை வடிவமைத்து, அதை குழந்தைகள் அணிந்து வந்துபோட்டியில் பங்கேற்றது பார்வையாளர் களை வெகுவாக கவர்ந்தது.

இறுதிப்போட்டி கோவை மாநக ராட்சி ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், ரத்தினபுரி மாநகராட்சி ஆரம்ப பள்ளி 5-ம் வகுப்பு மாணவி எஸ்.சுபாஷினி, சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 4-ம் வகுப்பு மாணவி எஸ்.பரணி, நல்லாம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி 5-ம் வகுப்பு மாணவி எஸ்.சஞ்சனா, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 2-ம் வகுப்பு மாணவி பி.ஆர்.மானசா, ஒன்றாம் வகுப்பு மாணவி ஏ.மது நிஷா, என்.அகல்யா, பி.ஆர்.புரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவி எஸ்.நஸ்ரியா, கணேசபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளி 4-ம் வகுப்பு மாணவி ஹர்ஷினி, ராமகிருஷ்ணாபுரம் மாநராட்சி ஆரம்ப பள்ளி 5-ம் வகுப்பு மாணவி ரெனிடா ரோஸ், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளி 5-ம் வகுப்பு மாணவன் சித்தார்த், வெட்டர்பர்ன்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் யாபேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டனர்.

SCROLL FOR NEXT