நம்ம ஊரு நடப்பு

மறுகூட்டல், மறுமதிப்பீடு: 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 , பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மே மாதம் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவு ஜுன் மாதம் 20-ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவு ஜுன் 27-ம் தேதியும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.

அதைத்தொடர்ந்து, விடைத்தாள் நகல் பெறுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன்பிறகு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அரசு தேர்வுத்துறை கடந்த புதன்கிழமை இணையதளத்தில் வெளியிட்டது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் மட்டுமே அதில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 1500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வந்திருப்பதாக அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT