மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானா மதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருபவர் ஜீவன் பிரதாப்.
தெற்குசந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த வாரம் நேபாளத்தில் நடந்த உலக அளவிலான கபடி போட்டியில் இந்திய அணியில் பங்கேற்றார்.
இதில் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்ட ஜீவன் பிரதாப்புக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப் பட்டன.
இதையடுத்து மாணவர் ஜீவன் பிரதாப்புக்கு பள்ளிச் செயலாளர் கிறிஸ்டிராஜ், முதுநிலை முதல்வர் அருள்ஜோஸ்பின் பெட்ஸி, முதல்வர் ஜோதிலட்சுமி மற்றும் ஆசிரியர் கள் பாராட்டு தெரிவித்தனர்.