நம்ம ஊரு நடப்பு

ராமநாதபுரம் | மனித கடத்தலுக்கு எதிராக ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி: பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மனித கடத்தலுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

உலக மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டசமூக நலத்துறை மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய இந்த பேரணி புதிய பஸ் நிலையம் அருகே தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.உன்னி கிருஷ்ணன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், வட்டாட்சியர் முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பி.சத்யநாராயணன், கேணிக்கரை காவல் ஆய்வாளர் ஆடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கம்

புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இப்பேரணி, கேணிக்கரை வழியாக செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மனிதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பாபு அப்துல்லா, தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன், உதவி தலைமை ஆசிரியர் ஜாகீர் உசேன், குழந்தை கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் பொன்தேவி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT