நம்ம ஊரு நடப்பு

இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை ஆக. 12 வரை நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு பல்கலைக்கழக மான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை ஆகஸ்டு 12-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. தொலைதூரக்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆகஸ்டு 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள இக்னோ பல்கலைக்கழக சென்னை மண்டல அலுவலகத்தையும் அணுகலாம் என இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்

SCROLL FOR NEXT