மாநில அளவிலான பூப்பந்துப் போட்டியில் மதுரை ஓசிபிஎம் பெண் கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தங்கப் பதக்கம் வென்றனர்.
பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான பூப்பந்துப் போட்டிசென்னையில் உள்ள எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவிகள், எண்ணூர் அணியை 35 - 28, 35 - 27 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கப் பதக்கம் பெற்றனர்.
மாணவிகளுக்கு பாராட்டு
பதக்கம் வென்ற மாணவிகளை பள்ளி தாளாளர் ஏ.டேவிட் ஜெபராஜ்,தலைமையாசிரியை என்.மேரி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்.ராஜேஸ்கண்ணன், பி.சர்மிளா ஆகியோர் பாராட்டினர்.