திண்டுக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டி. 
நம்ம ஊரு நடப்பு

திண்டுக்கல்லில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாட்மிண்டன் போட்டி

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான பாட்மிண்டன் (இறகுப் பந்தாட்டம்) போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரியில் நடைபெற்ற போட்டியில் 27 மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

தேசிய அளவில் தகுதி பெறுவர்

போட்டியை பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரி நிர்வாகி சூர்யா ரகுராம் தொடங்கிவைத்தார். முதல்வர் வாசுதேவன், தமிழ்நாடு பாரா பாட்மிண்டன் சங்க மாநிலத் தலைவர் அசோக், மாநில துணைத் தலைவர் சரவணன், மாநில பொதுச்செயலாளர் பத்ரிநாராயணன், இணைச் செயலாளர் விஜய் ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றிபெறும் வீரர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.

SCROLL FOR NEXT