நம்ம ஊரு நடப்பு

விழுப்புரம் | மாணவர்களுக்கு பிரம்பு அடி: ஆசிரியர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை திருப்புதல் தேர்வு நடைபெற்றது.

தேர்வு நேரம் முடிந்தும் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுதாமல் வெறும் 2 கேள்விகளுக்கு மட்டுமே விடையளித்துள்ளனர். சில மாணவர்களுக்கு இயற்பியல் என்றால் என்ன என்று கேட்டதற்கு பதில் தெரியாமல் இருந்ததாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் நந்தகோபால் சரியாக தேர்வு எழுதாத மாணவர்கள் அனைவரையும் பிரம்பால் அடித்துள்ளார்.

இதில் சில மாணவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆசிரியர் நந்தகோபாலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT