நம்ம ஊரு நடப்பு

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் வெற்றிக்கொடி மாணவர் வாசகர் வட்டம் தொடக்கம்

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்தை அடுத்துள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், ‘இந்து தமிழ்’ நாளிதழின் பள்ளி நாளிதழான ‘வெற்றிக்கொடி’ மாணவர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பள்ளியின் செயலர் கவிதாசன் பேசும்போது கூறியதாவது: “இந்து தமிழ் திசை நாளிதழின் வெற்றிக்கொடி பள்ளி நாளிதழ் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை யும், படைப்பாற்றலையும் வளர்க்கும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

பொது அறிவையும் சமகால செய்திகளையும் அறிந்து தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவும் வெற்றிக்கொடி நாளிதழை அனைத்து மாணவ, மாணவிகளும் படித்து பயன்பெறும் வகையில் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.

திரளான மாணவர்கள்

பள்ளியின் கல்வி ஆலோசகர் வெ.கணேசன், பள்ளி முதல்வர் ஆர்.உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சு.சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வெற்றிக் கொடி மாணவர் வாசகர் வட்டம் பொறுப்பாசிரியர் பு.ரகு செய்திருந்தார்

SCROLL FOR NEXT