பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நடத்திய மனித சங்கிலி. 
நம்ம ஊரு நடப்பு

பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி அரசு பள்ளி மாணவிகள் மனித சங்கிலி

செய்திப்பிரிவு

பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சாத்தான்குளம் அரசு பள்ளி மாணவிகள் நேற்று மனித சங்கிலி நடத்தினர்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்திராமநாதபுரம் மாவட்டம், சாத்தான்குளம்அரசு மேல்நிலைப் பள்ளியில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. மனிதச் சங்கிலி நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவ, மாணவியர் அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து பள்ளியில் இருந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மாணவிகளால் மனிதச் சங்கிலி நடத்தப்பட்டது. இதில் உதவிதலைமை ஆசிரியர் சுவாமிதாஸ், ஆசிரியர்கள் சாந்தி, திருமூர்த்தி, ஜெரோம், யமுனா உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து "பெண் குழந்தைகள் பாதுகாப்பு" தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT