தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில், கோவை மாணவ, மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில் 16-வது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி, கோவையில் நடைபெற்றது.
நெடுங்கம்பு, ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, வாள் வீச்சு, வேல்கம்பு வீச்சு, மான் கொம்பு வீச்சு, குழு கம்புவீச்சு, குழு ஆயுத வீச்சு, நேரடி சண்டைஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கோவை மாணவ, மாணவிகள் பதக்கங்கள் வென்றனர். அதன் விவரம்:
மினி சப்-ஜூனியர் பிரிவு
மினி சப்-ஜூனியர் மாணவர் பிரிவில் கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆலிவர் நேரடி சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கமும், மான்கொம்பு வீச்சில் வெண்கலப் பதக்கமும் வென்றார். ஏஎல்ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சச்சின் இரட்டைக் கம்பு வீச்சிலும், ஒய்எம்சிஏ மெட்ரிக் பள்ளி மாணவர் புவன் மான் கொம்பு வீச்சிலும் வெள்ளிப் பதக்கங்களும், மணிஸ் நர்சரி அண்டு பிரைமரி பள்ளி மாணவர் நௌனீத் வேல்கம்பு வீச்சில் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
எஸ்பிஓஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீ வர்ஷன், நேரடிசண்டை மற்றும் சுருள்வாள் வீச்சிலும்,கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி மாணவர் சர்வேஷ் நேரடி சண்டையிலும் தங்கப் பதக்கங்கள் வென்றனர். இவர்கள் மூவரும் இணைந்து குழு ஆயுத வீச்சில் தங்கப் பதக்கம் வென்றனர்.
மாணவிகள் பிரிவில் விசிவி சிசு வித்யோதயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நேத்ரா தங்கப் பதக்கமும், கோபால் நாயுடு பள்ளி மாணவி ஸ்வர்னிகா, நேரடி சண்டையில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
சிஎஸ்ஐ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நேகா நந்தினி மான்கொம்பு வீச்சில் தங்கப் பதக்கமும், நேரடி சண்டையில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். நிர்மலா மெட்ரிக் பள்ளி மாணவி கீதாஞ்சலி இரட்டைக் கம்பு வீச்சில் தங்கப் பதக்கமும், நேரடி சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இவர்கள் இருவரும் இணைந்து குழு ஆயுத வீச்சில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
சப்-ஜூனியர் பிரிவு
சப் ஜூனியர் ஆண்கள் பிரிவில்கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் மித்ரேஷ் ராம் மான்கொம்பு வீச்சிலும், இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் அபிமன்யு நேரடி சண்டை, இரட்டை கம்பு வீச்சிலும் தங்கப் பதக்கங்கள் வென்றனர். விமானப்படை பள்ளி மாணவர் ஜோகேந்திரா, அந்தோணியார் நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி மாணவர் சூரியபிரகாஷ் ஆகியோர் நேரடி சண்டையிலும், கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி மாணவர் மோனிஷ், சுருள் வாள் வீச்சிலும் வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.
ஸ்டேன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் நிக்கிலேஷ் வாள் வீச்சில் தங்கப் பதக்கமும், டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிஷ் ரோஷன் சுருள்வாள் வீச்சில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மித்ரேஷ் ராம்,மோனிஷ் இருவரும் இணைந்து குழு ஆயுத வீச்சில் தங்கப்பதக்கம் வென்றனர். அபிமன்யு, ரோஷன், சுதர்சன் மூவரும் இணைந்து குழு கம்பு வீச்சில் தங்கப் பதக்கம் வென்றனர். பெண்கள் பிரிவில் கோபால் நாயுடு மேல்நிலைப் பள்ளி மாணவி நிதர்ஷனா, வாள் வீச்சில் தங்கப் பதக்கமும், நேரடி சண்டையில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.
ஒய்எம்சிஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரசில்லா ஏஞ்சல் நேரடி சண்டையில் தங்க பதக்கமும், வேல்கம்பு வீச்சில் வெண்கலப் பதக்கமும் வென்றார். நேஷனல் மாடல் சிபிஎஸ்இ பள்ளி மாணவி அக்சதா மான் கொம்பு வீச்சிலும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி காயத்ரி, இரட்டைக் கம்பு வீச்சு மற்றும் நேரடி சண்டையிலும் வெண்கலப் பதக்கங்கள் வென்றார். புனித ஜோசப் நடுநிலைப் பள்ளி மாணவி தமிழினி, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மித்ரா ஆகியோர் நேரடி சண்டையில் வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.
மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மேரி பிரியதர்ஷினி சுருள்வாள் வீச்சில் தங்கப் பதக்கமும், நேரடி சண்டையில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். இவர்கள் மூவரும் குழு கம்பு வீச்சில் வெள்ளிப் பதக்கங்களும், மேரி பிரியதர்ஷினி, பிரசில்லா ஏஞ்சல் ஆகியோர் இருவரும் குழு ஆயுத வீச்சில் தங்கப் பதக்கங்களும் வென்றனர்.
ஜூனியர் பிரிவு
ஜூனியர் ஆண்கள் பிரிவில் பிஎஸ்ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளி மாணவர் வினோத் மான்கொம்பு வீச்சில் தங்கப் பதக்கமும், நேரடி சண்டையில் வெள்ளி பதக்கமும் வென்றார். பெண்கள் பிரிவில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சாருகேசினி சுருள்வாள் வீச்சு மற்றும் நேரடி சண்டையில் தங்கப் பதக்கங்கள் வென்றார்.
ராமகிருஷ்ண மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மிருதுளா வாள் வீச்சிலும், நேரடி சண்டையிலும் தங்கப் பதக்கங்கள் வென்றார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி பூஜா, மான் கொம்பு வீச்சில்வெள்ளிப் பதக்கமும், நேரடி சண்டையில் வெண்கலப் பதக்கமும் வென்றார். மிருதுளா, பூஜா,சாருகேசினி மூவரும் இணைந்து குழு ஆயுத வீச்சில் தங்கப் பதக்கம் வென்றனர். இவர்கள் சிலம்பாலயா சிலம்பாட்டப் பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர். தேசிய சிலம்பாட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பயிற்சியாளர்கள் செல்வக்குமார், சரண்ராஜ், ரஞ்சித் குமார் மற்றும் பள்ளி நிர்வாகிகள் வாழ்த்தினர்.