சென்னை கொளத்தூர் எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியின் 9-வது ஆண்டுவிளையாட்டு விழா பெரியமேடு நேரு விளையாட்டங்கில் நடந்தது.
இதில், அர்ஜுனா விருது பெற்ற நீச்சல் வீரரான ஒலிம்பியன் செபஸ்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவில், மாணவர்களின் அணிவகுப்பு, யோகா, கராத்தே ஸ்கேட்டிங் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. தேசிய, மாநில மற்றும் மாவட்டஅளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற300 மாணவர்களுக்கு கோப்பையும்,பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர் செபஸ்டியன்பேசும்போது, ‘‘எல்லா குழந்தைகளிட மும் தனித்திறமை இருக்கிறது. அதை வெளிக்கொண்டுவர பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். பள்ளியின் முதல்வர் மதி ராம்சிங் பேசும்போது, இந்த ஆண்டு மட்டும் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றனர்.
அவர்களைப் பாராட்டு கோப்பை வழங்கப்பட்டுள்ளது என்றார். விழாவில், எவர்வின் பள்ளி குழுமத்தின் தலைமை நிர்வாகி மகேஸ்வரி, சீனியர் முதல்வர் புருஷோத்தமன், பள்ளி இயக்குநர்கள் வித்யா, முரளி மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.