பெரம்பலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற தனலட்சுமி சீனிவாசன் பள்ளி அணிக்கு பரிசுக் கோப்பை, காசோலையை வழங்குகிறார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ.சீனிவாசன். அருகில், செயலாளர் பி.நீலராஜ், தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்க தலைவர் கே.சொக்கலிங்கம், செயலாளர் பி.பி. சுனில்குமார் ஆகியோர் உள்ளனர். 
நம்ம ஊரு நடப்பு

மாநில கிரிக்கெட் போட்டி: தனலட்சுமி சீனிவாசன் பள்ளி அணி முதலிடம்

செய்திப்பிரிவு

பெரம்பலூரில் நடைபெற்ற மாநிலஅளவிலான 19 வயதுக்குட்பட் டோருக்கான கிரிக்கெட் போட்டியில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி அணி முதலிடம் பெற்றது.

தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான 10-வது கிரிக்கெட் போட்டிகள் கடந்த பிப்.8-ம் தேதி பள்ளி வளாகத்தில் தொடங்கியது. 3 நாட்களாக நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி அணியும், ராணிப்பேட்டை அணியும் மோதின.

இதில், தனலட்சுமி சீனிவாசன் பள்ளி அணி முதல் இடத்தையும், ராணிப்பேட்டை அணி 2-ம் இடத்தையும் பெற்றன.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ.சீனிவாசன், செயலாளர் பி.நீலராஜ், தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கச் தலைவர் கே.சொக்கலிங்கம், செயலாளர் பி.பி.சுனில்குமார் ஆகியோர் முதலிடம் பெற்ற அணிக்கு தனலட்சுமி அம்மையார் நினைவுக் கோப்பை மற்றும் ரூ. 25 ஆயிரம் ரொக்கம், 2-ம் இடம் பெற்ற ராணிப்பேட்டை அணிக்கு கோப்பை மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் வழங்கி பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்கச் செயலாளர் பெ.பழனிசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT