ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். 
நம்ம ஊரு நடப்பு

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி

செய்திப்பிரிவு

ராமநாதபுரத்தில் பள்ளி மாணவர் களுக்கான மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

ராமநாதபுரம் மெனு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்- 2020-க்கான ஸ்கேட்டிங் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் 8, 10, 12, 14 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் 190 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மண்டபம் ராஜா கல்விக்குழுமத் தலைவர் டி.ராஜா போட்டிகளை தொடங்கி வைத்தார். செயலாளர் மருத்துவர் ஆர்.தில்லை ராஜ்குமார் வரவேற்றார். ஸ்கேட்டிங் போட்டிகளை பயிற்சியாளர் மதுப்ரீத்தி நடத்தினார்.

போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர் என ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு ரோல்பால் கழகச் செயலாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT