மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. 
நம்ம ஊரு நடப்பு

மாநில சதுரங்க போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் அபாரம்

செய்திப்பிரிவு

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர்வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கோல்டன் நைட்ஸ் சதுரங்க அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 300-க்கும்மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்றனர். 8, 10, 12, 15 ஆகிய வயதுபிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

பத்து வயதினருக்கான பிரிவில் மதுரை மேலூர் ஒன்றியம், அ.செட்டியார்பட்டி தொடக்கப் பள்ளி 5-ம் வகுப்பு மாணவிஅ. சோலையம்மாள், 15 வயதினருக்கான பிரிவில் அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 8-ம்வகுப்பு மாணவி ம.காயத்ரி ஆகியோர் முதலிடத்தைப் பிடித்தனர். அ.செட்டியார்பட்டி தொடக்கப் பள்ளி 3-ம் வகுப்பு மாணவி அ.தமிழரசி 8 வயதினருக்கான பிரிவில் 4-ம் இடம் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவிகளை அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை மணிமேகலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியரும்,சதுரங்க பயிற்சியாளருமான செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

SCROLL FOR NEXT