உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற குடியரசு தினவிழா கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மதுரை யா.ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் விளையாட்டுச் சீருடை வழங்கும் விழா மற்றும் உயர் நீதிமன்றக் கிளையில் குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு யா.ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தார். மதுரை கிழக்குவட்டாரக் கல்வி அலுவலர் ஷாஜகான், கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் ஜோஸ்பின் ரூபி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மோசஸ் வரவேற்றார்.
உயர் நீதிமன்றக் கிளையில் ஜன.26-ல் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் நீதிபதிகள் முன்னிலையில் அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் சிலம்பம் சுற்றினர்.
பெண்கள் பாதுகாப்புக்காக காவல்துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள காவலன் செயலி விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். இந்நிகழ்ச்சி நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களைஅதிகம் கவர்ந்தது. இதில்பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் விளையாட்டுச் சீருடை வழங்கப்பட்டது.
விழாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வினோத், சிலம்பம் ஆசிரியர் பாண்டி, ஆசிரியை பைரோஜா உள்ளிட்டோர் பேசினர். ஆசிரியைகள் சகிலாமாய், பானு, உமாராணி, ராஜேஸ்வரி ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.