நம்ம ஊரு நடப்பு

பிரதமரின் உடற்தகுதி திறன் திட்டத்தில் சிறப்பு அந்தஸ்து: பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

உடல் நலனை மேம்படுத்தி வலுவான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் ‘ஃபிட் இந்தியா இயக்கம்’ என்ற உடற்தகுதி திறன் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் பள்ளிகள் 3, 5 ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கும் அவர் அனுப்பியுள்ளசுற்றறிக்கையில், "பிஃட் இந்தியாஇயக்கத்துக்காக www.fitindia.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் அனைத்து வகை பள்ளிகளும் பதிவு செய்துஃபிட் இந்தியா வினாக்களுக்கு பதில்அளித்து 3 ஸ்டார் அல்லது 5 ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT