மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவ, மாணவிகள். 
நம்ம ஊரு நடப்பு

பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்

செய்திப்பிரிவு

மதுரையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருக்குப் பாத பூஜை செய்தனர்.

மதுரை கோவில் பாப்பாகுடியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நலன் கருதி பாத பூஜை நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. மாணவர்கள் தங்களது பெற்றோருக்குப் பாத பூஜை நடத்தினர்.

இதையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைவர் வடிவேலு, முதல்வர் விஜயலட்சுமி, துணை முதல்வர் ஹேமா, கூடுதல் துணை முதல்வர் ராமலட்சுமி, 10 மற்றும் பிளஸ்-2 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் 126 மாணவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பாத பூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர். சில மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் பாத பூஜை செய்தனர். பொதுத் தேர்வு எழுதுவோருக்கு பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT