கணித பாட செயல்திட்ட ஆராய்ச்சியில் முதலிடத்தைப் பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
மாணவர்களின் இடைநின்றலை தடுப்பதற்கும், செயல்வழி கற்றலை ஊக்குவிக்கும் வகையிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு செயல் ஆராய்ச்சியில் பாடம் வாரியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த சனிக்கிழமை அன்று ராமநாதபுரத்தில் உள்ளயுனைடெட் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கணித பாட செயல்திட்டஆராய்ச்சியில் ‘‘மருத்துவத்தில் கணிதத்தின் பயன்பாடு’’ என்ற தலைப்பில் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சபர்மதி,ஆர்த்தி, வசந்த், ஜஸ்சன்,ரோகன் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.
அவர்களுக்கு பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய தலைமை ஆசிரியர் செல்வராஜ், ‘‘மாணவர்கள் தொடர்ந்து இது பல போட்டிகளில்பங்கு பெற்று நிறைய சாதனைகள் படைக்க வேண்டும்’’ என்றார்.