தேசிய பெண் குழந்தைகள் தின கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த, கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பி.சவுமியாவுக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பரிசு வழங்கினார். அருகில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ச.சாக்ரடீஸ் குலசேகரன். 
நம்ம ஊரு நடப்பு

தேசிய பெண் குழந்தைகள் தின கட்டுரைப் போட்டியில் கோவை கெம்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவிக்கு 2-ம் பரிசு

செய்திப்பிரிவு

தேசிய பெண் குழந்தைகள் தினகட்டுரைப் போட்டியில், கெம்பநாயக் கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பி.சவுமியா 2-ம் பரிசு பெற்றார்.

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், தேசிய பெண் குழந்தைகள் தினவிழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம் உட்பட பல்வேறு போட்டிகள், கோவை டவுன்ஹாலில் புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.

இப்போட்டியில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்துமாணவ, மாணவிகள் கலந்துகொண்ட னர். அவர்களில் முதல் 3 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

'பெண் குழந்தைகளுக்கு அரசின்திட்டங்கள்' என்ற தலைப்பில் கட்டுரைஎழுதி, மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்த கெம்பநாயக்கன் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி பி.சவுமியாவுக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுக் கோப்பை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணா, பள்ளியின் தலைமை ஆசிரியர் ச.சாக்ரடீஸ் குலசேகரன், மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர். கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற மாணவியை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT