பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, தளி மலைக்கிராம அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஓசூர் நகரில் உள்ள வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், மலை கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தளி ஒன்றியத்தில் உள்ளசூளகுண்டா, கரடிக்கல், பாண்டுரங்கதொட்டி ஆகிய மலைக்கிராமங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எவ்வாறு? என்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தனித்திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சியாளரும் உளவியல் ஆலோசகருமான பவானி ரமேஷ் பயிற்சி அளித்தார்.
அப்போது பொதுத்தேர்வை எதிர்கொள்வது எவ்வாறு? தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? தேர்வு முடிவுக்கு பின் மனதில் எந்தவிதமான சஞ்சலமின்றி தைரியமாக இருப்பது எப்படி? என்பது உட்பட தேர்வு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.