ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகளில் தமிழக அணி சார்பில் விளையாடிய விருதுநகர் வத்திராயிருப்பு பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்.
இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் சார்பில் தேசிய அளவிலான பூப்பந்துப் போட்டி ஆந்திர மாநிலம்மேற்கு கோதாவரி மாவட்டம் நாராயணபுரத்தில் நடைபெற்றது. இதில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் தமிழக அணி சார்பாக பங்கேற்றனர். இதில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.தங்கேஸ்வரன் 14 வயதுக்குட்பட்ட பிரிவிலும், மாணவர்கள் எம்.முத்து மணிகண்டன், கே. சம்பத்குமார் ஆகியோர் 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும், மாணவர் எஸ்.சதீஷ் 19 வயதுக்குட்பட்ட பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தனர்.
இம்மாணவர்களை பள்ளியின் தலைவர் ரமாகாந்தன், செயலர் சங்கர கிருஷ்ணமூர்த்தி, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்எஸ்.ராஜசேகரன் மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டினர்.