பாம்பனில் உள்ள சின்னப்பாலம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி. 
நம்ம ஊரு நடப்பு

குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள்? - பாம்பனில் தெருமுனை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள்? என்பது குறித்து பாம்பனில் தெருமுனை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

பாம்பன் நேசக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாம்பனில் உள்ள சின்னப்பாலம், தெற்குவாடி புயல் காப்பகம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதற்கு கடல் ஓசை சமுதாய வானொலியின் இயக்குநர் காயத்ரி உஸ்மான் தலைமை வகித்தார்.

இதில் குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாவும் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், பெண் குழந்தைகளுக்கு கல்வி, குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து ஆகியவை வலியுறுத்தப்பட்டது தெருமுனை விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் பாம்பனைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், மீனவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT