பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியில் வேறு பள்ளி மாணவர்களுடன் திட்டச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடி புதிய அனுபவம் பெற்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர் நடராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மருங்கூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர், திட்டச்சேரி அரசு உயர் நிலைப் பள்ளிக்கு சென்றனர். புதிய அனுபவம் அவர்கள் அப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, இணைப்பு பள்ளியில் உள்ள வசதிகள், கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள், அலுவலகங்கள், பள்ளி வளாகத் தூய்மை, தூய்மையான கழிப்பறைகள், மாணவ, மாணவிகளின் அணுகுமுறை போன்றவற்றை பார்வையிட்டு புதிய
அனுபவம் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், பட்டதாரி ஆசிரியர்கள் குமார், விஜயா, இலக்கியா, ஒருங்கிணைந்த ஆசிரியைகள் பிரதீபா, வனஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் கவிதா, நிர்மல்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பட்டதாரி ஆசிரியர் மதிவாணன் வரவேற்றார். நிறைவாக, பட்டதாரி ஆசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார்.