பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் பழநியாண்டவர் மெட்ரிக் பள்ளியில் திருப்பாவை, திருவெம்பாவை குறித்த மனப்பாடப் போட்டி, இசைப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடந்தது. போட்டிகளில் பழநியில் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வயது வாரியாகப் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு பழநி கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.